மே-3க்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுமா? - முழுவீச்சில் தயாராகும் ரயில் நிலையங்கள்

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்கள் சமூக விலகலை பின்பற்றும் வகையில், முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
மே-3க்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுமா? - முழுவீச்சில் தயாராகும் ரயில் நிலையங்கள்
x
கொரோனா ஊரடங்கு மே 3ஆம் தேதிக்கு பிறகு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தளர்த்தும் பட்சத்தில், ரயில் பயணிகள் சமூக விலகலை பின்பற்றும் வகையில், அனைத்து ரயில்நிலையங்கள் தயாராகி வருகின்றன. சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களின் நடைமேடைகளில் 6 அடி இடைவெளியில் கோடுகள் வரையப்பட்டுள்ளன. அதேபோல், டிக்கெட் கவுண்டர்களில் 6 அடி இடைவெளியில் கோடுகள் போடப்பட்டுள்ளன.  ரயில் நிலையம் வரும் பயணிகள் அனைவரும் சமூக விலகலை பின்பற்றவே இந்த ஏற்பாடு என ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ரயில்நிலையத்தின் பல இடங்களில், கொரோனா நோய் பரவல் தடுப்பு நடைமுறைகள் குறித்து விளம்பர அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்