கொரோனா - சென்னை ராயபுரம் மண்டலத்தில் நோய் தொற்று தொடர்ந்து அதிகரிப்பு

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கொரோனா - சென்னை ராயபுரம் மண்டலத்தில் நோய் தொற்று தொடர்ந்து அதிகரிப்பு
x
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்றால் 158 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 43 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்று விட்டனர். தற்போது மருத்துவமனையில் மட்டும் 110 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏற்கனவே ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது துறைமுகம் தொகுதி மற்றும் மவுண்ட் ரோடு, பெரியமேடு பகுதிகளில் நோய் தொற்று தினம் தினம் காணப்படுவதாகவும், அந்தந்த பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள ராயபுரத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகப்படும்படி உள்ளவர்களுக்கு தொடர்ந்து பரிசோதனை செய்து வருகின்றனர்.  ராயபுரம் மண்டலத்தில் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்