"கொரோனா வைரஸ் தடுப்பு பணி : 3ஆம் நாளாக மத்திய குழு ஆய்வு"

கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழகம் வந்துள்ள, மத்திய குழுவினர், மூன்றாம் நாளாக பல்வேறு இடங்களை பார்வையிட்டனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு பணி : 3ஆம் நாளாக மத்திய குழு ஆய்வு
x
சென்னை கீழ்ப்பாக்கம் மாநகராட்சி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள், தற்காலிக முகாம்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யும் முறை குறித்து அதிகாரிகளிடம் அந்த  குழு கேட்டறிந்தது. சென்னை ரிப்பன் மாளிகையில் அவசர தேவைக்கு வழங்கப்பட்டும் இ-பாஸ் முறையையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர். ஊரடங்கு உத்தரவால் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் வங்கிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தது. சென்னை மாநகரில் அதிகம் பாதித்த ராயபுரம் மண்டலத்தில்,  காசிமேடு அரசு குழந்தைகள் இல்லத்தில் உள்ள சிறுவர்களின் மனநிலை, பாதுகாப்பு அம்சங்கள், அவர்களின் திறன் மேம்பாட்டிற்கும் அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து மத்திய குழு கேட்டறிந்தது.

Next Story

மேலும் செய்திகள்