காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி: "உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக உள்மாவட்டங்களில் மிதமான மழை முதல், கனமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி: உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று, இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாநிலத்தின் உள் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம், காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்றும் குறிப்பாக, கடலூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் மிதமான மழை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்