"கோயம்பேடு சந்தையை இடம் மாற்ற திட்டம் - அதிகாரிகள் முக்கிய ஆலோசனை"

சென்னை கோயம்பேடு சந்தையை புறநகரில் அமைப்பது குறித்து வியாபாரிகள் சங்கத்தினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் நாளை மீண்டும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
x
கோயம்பேடு சந்தையில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் காய்கறிகள் வாங்கியதாக புகார் எழுந்த நிலையில் கொரோனா தடுப்பு குறித்து மத்திய குழுவினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், கோயம்பேடு சந்தையை மாதவரம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்றி அமைப்பது குறித்து வியாபாரிகள் சங்க பிரநிதிகளுடன் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். கோயம்பேடு சந்தையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில் மேலும் 4 பேருக்கு உறுதியானால் சந்தை மூடப்படும் என காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார். இதற்கு வியாபாரிகள் சங்கத்தினர் ஆட்சேபம் தெரிவித்தனர். கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் மீண்டும் நாளைஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்