"கொரோனாவால் பலியான மருத்துவர்களுக்கு இறுதி சடங்குகளை செய்ய முன்வந்த பெண் காவல் ஆய்வாளர்"

பெண் காவல் ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு
கொரோனாவால் பலியான மருத்துவர்களுக்கு இறுதி சடங்குகளை செய்ய முன்வந்த பெண் காவல் ஆய்வாளர்
x
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் இறுதி சடங்குகளை தானே முன்னின்று நடத்துவதாக பெண் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்துள்ளது. 

சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு எழுந்தது. இந்த சம்பவம் தனக்கு மனவேதனையை அளித்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் காஞ்சனா தெரிவித்திருந்தார். மருத்துவர்களின் இறப்பை அவமதிக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். ஒருவேளை கொரோனாவால் மருத்துவர்கள் உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் இறுதி சடங்குகளை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தாமே முன் நின்று செய்வதாக காஞ்சனா கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்