15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் - ஊரடங்கு நேரத்தில் திரும்பி வந்த அதிசயம்

15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகனை ஊரடங்கு மீண்டும் தன் தாயிடம் சேர வைத்த சம்பவம் விருதுநகரில் நடந்துள்ளது.
x
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நந்தவனபட்டி தெருவை சேர்ந்தவர் லட்சுமி. சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்த இவருக்கு 2 மகள், 5 மகன்கள். இதில் 3வது மகனான பாண்டியராஜன், கடந்த 15 வருடங்களுக்கு முன் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. 33 வயதான அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சூழலில் திடீரென பாண்டியராஜன் ஊரடங்கு நேரத்தில் தன் தாயை தேடி வந்தார். சினிமா ஆசையில் வீட்டை விட்டு வெளியேறிய பாண்டியராஜன் சென்னைக்கு வந்துள்ளார். ஆனால் தன் ஆசை நிறைவேறாத நிலையில் நெற்குன்றத்தில் உள்ள பழைய பேப்பர் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். ஊரடங்கு நேரத்தில் வேலை வாய்ப்பு இல்லாததால் தன் தாயிடம் செல்ல முடிவெடுத்த அவர், 6 நாட்கள் நடந்தே தன்  ஊருக்கு சென்றுள்ளார். 15 ஆண்டுகளுக்கு பிறகு தன் மகனை சந்தித்த அந்த தாய், ஆனந்த கண்ணீர் விட்டு அழுத காட்சி பார்ப்போரை நெகிழ வைத்தது. 


Next Story

மேலும் செய்திகள்