விசா முடிந்தும் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் கைது
திண்டுக்கல்லில் விசா முடிந்தும் ஒரே இடத்தில் தங்கியிருந்த வங்கதேசத்தினர் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத பிரசாரத்திற்காக தமிழகம் வந்த வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் விசா காலம் முடிந்தும் திண்டுக்கல் பேகம்பூரில் தங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், வங்கதேசத்தினரிடம் விசாரணை நடத்தியதோடு பாஸ்போட் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில், புகார் உறுதியானது. தொடர்ந்து, அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. பின்னர், வெளிநாட்டினர் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின்படி, வங்கதேசத்தினர் 11 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story

