"உயிர்களை போன்றது தான் ஏழைகளின் வாழ்வாதாரம்" - ப.சிதம்பரம்

உயிர்கள் எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவுக்கு ஏழைகளின் வாழ்வாதாரமும் முக்கியமானது என பிரதமரி​டம் மாநில முதலமைச்சர்கள் எடுத்துக் கூற வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உயிர்களை போன்றது தான் ஏழைகளின் வாழ்வாதாரம் - ப.சிதம்பரம்
x
* தற்போதைய சூழ்நிலையில் வரும் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை திரும்பப் பெறுவது தவிர்க்க இயலாததாகவே தோன்றுவதாக தமது பதிவில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

* ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது என்றும், அவர்களுக்கு தினசரி ஊதியமோ, வருமானமோ இல்லாத நிலையில் உள்ளதை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார். 

* ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணத்தை கொண்டு போய்  சேர்ப்பது மத்திய அரசின் முதல் கடமை என்றும் இதனை அரசால்  செய்ய முடியும், செய்ய வேண்டும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

* இதனை செய்ய மத்திய அரசுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் தான் செலவாகும் என்றும், அந்த தொகை மத்திய அரசிடம் உள்ளதாகவும் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார். 

* எத்தனை முறை இதனை நாங்கள் வலியுறுத்தினாலும் மத்திய அரசு தங்கள் கருத்தை ஏற்க மறுத்து வருவதாகவும்,  இது சாத்தியமான திட்டம் என்றும், பொருளாதார ​ரீதியில் நியாயமான நடவடிக்கை தான் என்றும் ப.சிதம்பரம் அதில் தெரிவித்துள்ளார். 


* இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளாத வரை, மத்திய அரசு ஏழைகளை பற்றிக் கவலைப்படாத, மனிதாபிமானமில்லாத அரசு என்று தானே கருத வேண்டும்? எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

* ஏழைகள் தங்கள் வாழ்வாதாரத்தை, வேலையை இழந்து 18 நாட்களாக உள்ளதாகவும், அவர்களின் சேமிப்பு கரைந்து போய் விட்டதாகவும் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார். 

* மேலும், ஏழைகளில் பலர் உணவுக்காக வரிசையி​ல் நின்று வரும் நிலையில், சாமானிய மக்கள் பட்டினியுடன் செல்வதை இந்த அரசு அவர்கள் பின்னார் இருந்து வேடிக்கை பார்க்கப் போகிறதா எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

* ஏழை, எளிய, சாமானிய மக்களின் கைகளில் உடனடியாக பணத்தை கொண்டு போய் சேர்க்கும் ஒற்றை கோரிக்கையை பிரதமரிடம் வலியுறுத்த முதலமைச்சர்களிடம் தனது  பணிவான யோசனையை  தெரிவித்து உள்ளதாகவும்,   பிரதமரின் முடிவு எப்படி அமையும் என பார்க்கலாம் எனவும் ப.சிதம்பரம் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்