கொரோனா பிரத்யேக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் - குடும்பத்தினரின் வேண்டுகோளை நிராகரிக்கும் நெகிழ வைக்கும் உரையாடல்
பதிவு : மார்ச் 29, 2020, 08:37 AM
கொரோனா தாக்கத்திற்கு ஆளாகாதே 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேலையை விட்டு சொந்த ஊர் வந்துவிடு என கண்ணீர் வடிக்கும் பெற்றோரிடம் இராணுவத்தில் வேலை செய்வதாக நினைத்துக் கொள்ளுங்கள் என கூறி பலரின் பாராட்டை பெற்றார்
ருத்ர தாண்டவம் ஆடி, உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தமிழ்நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கண்ணுக்கு தெரியாத கிருமியிடம் இருந்து மக்களை காப்பாற்ற 24 மணி நேரமும் மருத்துவர்கள் , செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த பணியில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பாண்டித்துரை என்பவர் , சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள அரசினர் புறநகர் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா பாதித்த நோயாளிகளை தான் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தகவலை பாண்டித்துரை, தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.
தகவலை கேட்டதும் பதற்றமடைந்த பெற்றோர் , பாண்டித்துரையை வேலையை ராஜினாமா செய்து விடு உயிர் தான் முக்கியம்,  பிச்சை எடுத்தாவது உன்னை காப்பாற்றுகிறோம் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். அந்த ஆடியோ சமூக வலைதளத்தில் காட்டுத் தீ போல் பரவியது...

இதற்கிடையே, தனது குடும்பத்தினரின் வேண்டுகோளை நிராகரித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாண்டித்துரையை நமது தந்தி டி.வி,. தொடர்பு கொண்டு கேட்டபோது, தனக்கு சிறப்பு ஊதியம் வேண்டாம் எனவும் பணி நிரந்தரம் செய்தால் போதும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

நாட்டுக்காக சேவை செய்யும் ராணுவ வீரனை எப்படி நினைப்பீர்களோ அது போல் தன்னை நினையுங்கள் என கூறி பெற்றோரை சமாதானம் செய்து உள்ளார் பாண்டித்துரை.. 108 ஆம்புலனஸ் ஓட்டுனர் பாண்டித்துரையின் தன்னலமற்ற இந்த பொது சேவையை மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் உள்பட ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.. 

பிற செய்திகள்

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மரணம் - உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

இலங்கை அமைச்சரும், தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

194 views

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில், புதிதாக 646 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.

60 views

புழல் சிறையில் இருந்து கடலூர் சென்ற கைதிகளுக்கு கொரோனா - பேரறிவாளனை விடுவிக்குமாறு அற்புதம்மாள் கோரிக்கை

புழல் சிறையில் இருந்து கடலூர் சிறைக்குச் சென்ற 2 சிறைவாசிகளுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக வரும் செய்தி அச்சம் தருவதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.

37 views

கேரளாவில் பாம்பை விட்டு மனைவியை கொன்ற விவகாரம் - ஒரு வயதில் தாயை இழந்து பரிதவிக்கும் குழந்தை

கேரளாவில் மனைவியை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த விவகாரத்தில் குழந்தையை தாய் வீட்டாரிடம் ஒப்படைக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது.

9 views

மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் - நிதிப்பற்றாக்குறை ரூ.8.5 லட்சம் கோடியாக உயரும்

மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்க உள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

25 views

புதிய மின்சார சட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு - மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.