கேரளாவில் இருந்து கோவை வந்த தமிழக தொழிலாளர்கள் - பாலக்காடு முகாமில் தங்கவைப்பு

ஆபத்தான முறையில் கேரளாவில் இருந்து கோவை வந்த 25 க்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்களை போலீஸார் பிடித்து பாலக்காடு முகாமில் தங்க வைத்துள்ளனர்.
கேரளாவில் இருந்து கோவை வந்த தமிழக தொழிலாளர்கள் - பாலக்காடு முகாமில் தங்கவைப்பு
x
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக - கேரள எல்லை முழுமையாக மூடப்பட்டது. கேரளவில் இருந்து கோவை வரும் அத்தியாவசிய பொருட்கள் அல்லாத பிற வாகனங்கள் மீண்டும் கேரளாவிற்கே திருப்பி அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வரும் தமிழக தொழிலாளர்கள்,  குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தில் கிடைக்கும் வாகனங்களில் ஏறியும், நடை பயணமாகவும் எல்லைகளை கடக்கின்றனர். ஆனால் தற்போதைய சூழலில் தொழிலாளர்கள் அமைதி காத்து முகாமில் தங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர். தற்போது வரை தமிழக தொழிலாளர்கள் சுமார் 200 பேர் பாலக்காடு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்