திருவண்ணாமலையில் 139 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் - இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் தகவல்

வெளிநாடுகளில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த 139 நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளதாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.
திருவண்ணாமலையில் 139 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் - இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் தகவல்
x
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ஆகியோர் தலைமையில் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கள் குறித்தும் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேட்டியளித்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அனைத்து மாவட்ட எல்லைகளும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். மேலும் வெளிநாடுகளில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த 139 நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், அமைச்சர் கூறினார் 

Next Story

மேலும் செய்திகள்