தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் விவரம்

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ள நிலையில் மாவட்ட வாரியாக எவ்வளவு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் விவரம்
x
மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில் 13 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

*  சென்ட்ரல் அரசு மருத்துவமனையில் ஆறு பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 3 பேர்,  கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 2 பேர், இதை தவிர தனியார் மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

* அதிகபட்ச பாதிப்புகளை ஏற்படுத்திய இரண்டாவது மாவட்டமான ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் கொரோனோ பாதித்த 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

* கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 2 பேரும், நெல்லை , காஞ்சிபுரம் வாலாஜாபாத், மதுரை ஆகிய அரசு மருத்துவமனைகளில் தலா ஒருவர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுகின்றனர். 

* தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை சார்பில் நோயாளிகளுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்