"சென்னையில் 200 பேருந்துகள் இயக்கம்" - மாநகர் போக்குவரத்து கழகம்

அத்தியாவசியம் மற்றும் அவசரப் பணிகளுக்காக, இன்றையதினம் 200 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் 200 பேருந்துகள் இயக்கம் - மாநகர் போக்குவரத்து கழகம்
x
மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்  கணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தலைமைச் செயலக அலுவலர்கள், பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தங்களது பணிக்கு வந்துசெல்ல ஏதுவாக இந்த பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான சிங்கப்பெருமாள் கோயில், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பூவிருந்தவல்லி, மணலி, எண்ணூர், நெற்குன்றம், தேனாம்பேட்டை மற்றும் துரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அவசரப் பணிகளுக்கு, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் போதிய பேருந்துகளும் ஓட்டுநர்களும் தயார் நிலையில் உள்ளனர் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்