கொரோனா எதிரொலி : தேர்வுகள் தள்ளி வைப்பது குறித்து தேர்வுத்துறை ஆலோசனை

தமிழகத்தில் மீதமுள்ள பொது தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து தேர்வுத்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
x
தமிழகத்தில் பிளஸ்-டூ பொது தேர்வுகள் கடந்த 2 ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3000 மையங்களில் 8 லட்சம் மாண-மாணவிகள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். இதே போல் கடந்த 4 ம் தேதி தொடங்கிய பதினொன்றாம் வகுப்பு தேர்வை 3000 மையங்களில் 8 லட்சம் மாண-மாணவிகள் எழுதி வருகின்றனர்.    

இந்நிலையில் பல லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் தேர்வு மையங்களில், கிருமி நாசினி  தெளிப்பு உள்ளிட்ட கொரோனா வைரஸ் தடுப்பு  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வரும் 27ந்தேதி 10 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்கும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில் உரிய மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிபிஎஸ்இ தேர்வுகள் மார்ச் 31 ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மீதமுள்ள பொது தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்