யூ-டியூப் பார்த்து காதலன் பிரசவம் - துண்டான சிசுவின் கை
பதிவு : மார்ச் 19, 2020, 02:00 PM
கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர், யூ-டியூப் பார்த்து தானே பிரசவம் பார்த்த பதைபதைக்க வைக்கும் கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. 20 கிலோ மீட்டர் ரத்தம் சொட்ட, சொட்ட மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்ற கொடுமை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த 27 வயது சவுந்தர் என்ற இளைஞர் சிலிண்டர் தூக்கும் வேலை செய்து வருகிறார். அதே பகுதி சேர்ந்த கல்லூரி  மாணவியும், சவுந்தரும் காதலித்து வந்தனர். இருவரும் நெருங்கிப் பழகியதில், மாணவி 8 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதுவரை ஏற்படாத சிக்கலை தற்போது அவர்கள் சந்தித்தனர். 

எட்டு மாத கர்ப்பம் ஆன நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கல்லூரி மாணவி வற்புறுத்தி உள்ளார். ஆனால், சவுந்தர் வீட்டார், இந்தக் காதலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியில் உள்ள வனப் பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு யூடியூப் பார்த்து காதலனே, பிரசவம் பார்த்துள்ளார். இதில், குழந்தையின் கை துண்டானது. 
நஞ்சுக் கொடி என நினைத்து, காதலியின் குடலையும் அறுத்துள்ளார். வலியால் துடித்திருக்கிறார், கல்லூரி மாணவி... வயிற்றுக்குள் இருந்த குழந்தையுடன், இருவரும் மோட்டார் சைக்கிளில் பொன்னேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். கும்மிடிப்பூண்டி மருத்துவமனையில், இறந்த சிசுவை எடுத்த நிலையில், பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தில், காதலன் சவுந்தரை பிடித்து விசாரித்து வருகின்றனர். குழந்தையை கொலை செய்யும் நோக்கில் அழைத்துச் சென்றதாக கொலை முயற்சி வழக்கு பதிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

மகளின் 8 மாத கர்ப்பம் தமக்கு தெரியாது என பெண்ணின் தாயார் கூறியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிற செய்திகள்

மார்ச் 10 முதல் 17 வரை பீனிக்ஸ் மால் சென்றவரா நீங்கள்? - கவனமுடன் இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு மார்ச் 10 முதல் மார்ச் 17க்கு இடைப்பட்ட நாட்களில் சென்றவர்கள் கவனமாக இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

26 views

தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் : கிருமி நாசினிகளை வழங்கினார் ஆர்.எஸ்.பாரதி

கொரோனா வைரஸ் காரணமாக முக கவசம் அணிவது மற்றும் கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

14 views

கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கடன் - மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் கோரிக்கை

வறுமையில் வாடும் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ 10,000 கடனாகவும் 5 ஆயிரம் மானியமாகவும் உடனடியாக வழங்க வேண்டும் மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

11 views

அரசு மருத்துவமனையில் எம்.பி.திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனையில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

8 views

ஆன்லைன் மூலம் வகுப்புகள் - சென்னை பல்கலை. துணை வேந்தர் உத்தரவு

ஊரடங்கு உத்தரவால் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.

40 views

நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவ வேண்டும் - அரசுக்கு நடிகர் சரவணன் கோரிக்கை

கொரோனாவால் சினிமா தொழில்கள் முடங்கியுள்ளதால் நலிவடைந்த கலைஞர்களுக்​கு உதவித்தொகை வழங்க வேண்டும் என நடிகர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.