கடந்த 10 நாட்களில் தங்கம், வெள்ளி விலை தொடர் வீழ்ச்சி

தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை கடந்த 10 நாட்களில் சுமார் 3 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்துள்ளதுடன், வெள்ளி விலை கிலோவுக்கு 12 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது.
x
கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைய தொடங்கியதில் இருந்து தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது.

நாடுகளிடையே ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம் முடங்கியதால்,  பங்குச் சந்தைகளில் பெரும் இழப்பு ஏற்பட்டது. 

பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறிய முதலீட்டாளர்கள், அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்ததால், ஆபரண தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றத்தை கண்டது.

கடந்த 7 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 33 ஆயிரத்து 656 ரூபாயாக விற்பனையானது.

அதன்பின்னர் 10 ஆம் தேதி 33 ஆயிரத்து 712 ரூபாயாக ஏற்றம் கண்ட நிலையில், 13 ஆம் தேதி 32 ஆயிரத்து 160 ரூபாயாக சரிந்தது.

16 ஆம் தேதி 31 ஆயிரத்து 544 ரூபாயாக குறைந்த நிலையில், 17 ஆம் தேதி 30 ஆயிரத்து 560 ரூபாயாக குறைந்துள்ளது.

கடந்த வாரத்தில் இருந்து தற்போது வரை தங்கம் விலை சவரனுக்கு சுமார் 3 ஆயிரம் ரூபாய் விலை குறைந்துள்ளது.

வெள்ளி விலையும் கடந்த ஒரு வாரத்தில்  கிலோவுக்கு 12 ஆயிரம் ரூபாய் வரை வீழ்ச்சியை கண்டுள்ளது.

கடந்த 10 ஆம் தேதி 50 ஆயிரத்து 300 ஆக இருந்த ஒரு கிலோ வெள்ளி, 12 ஆம் தேதி 48 ஆயிரத்து 900 ரூபாயாக சரிந்தது.

13 ஆம் தேதி இந்த வீழ்ச்சி 45 ஆயிரத்து 900 ரூபாயாக இருந்தது.
15 ஆம் தேதி 44 ஆயிரமாக குறைந்தது.

16 ஆம் தேதி மீண்டும், செங்குத்தான வீழ்ச்சி போல, 40 ஆயிரத்து 800 ரூபாய்க்கு குறைந்ததுடன், 17 ஆம் தேதி  38 ஆயிரத்து 100 ரூபாயாக சரிந்துள்ளது.

இந்த வீழ்ச்சி காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்