பட்டாசு தொழிலாளர்களின் பிள்ளைகளை சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்ற ஆசிரியர்
பதிவு : மார்ச் 18, 2020, 07:44 AM
அரசு பள்ளியில் பயிலும் பட்டாசு தொழிலாளர்களின் பிள்ளைகளை தலைமை ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மங்கலம் கிராமத்தில் அரசுத் தொடக்கப் பள்ளி  தலைமை ஆசிரியராக ஜெயசந்திரன் உள்ளார் ...   

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 64 மாணவ, மாணவிகள் மட்டுமே இங்கு பயின்று வந்தனர் . மாணவர் வருகையையும் , சேர்ப்பையும்   அதிகரிக்க முடிவு செய்த அவர் , 5-ம் வகுப்பு மாணவர்கள்  விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால்  விமானத்தில் அழைத்து செல்வதாக கூறினார் . 

இதனால் ஆர்வமுடன் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். மேலும் படிப்பிலும் கவனம் செலுத்த தொடங்கினர். இதனையடுத்து, 5 ஆம் வகுப்பில் படித்து வந்த 20 மாணவர்களையும்,  உடன் பணிபுரியும் 4 ஆசிரியர்களையும் தனது சொந்தச் செலவில் சென்னைக்கு இரண்டு நாள் ஜெயசந்திரன் சுற்றுலா அழைத்து சென்றார்

மாணவர்களின் கனவை நிறைவேற்ற தமக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும், இந்த நிகழ்வு தமக்கு மன நிறைவு தந்ததாகவும் கூறுகிறார் தலைமை ஆசிரியர் ​ஜெயசந்திரன்..விமான பயணத்திற்கு பிறகு மற்ற மாணவர்களும் தற்போது கல்வி மீது கனவம் செலுத்தி வருவதாக தெரிவிக்கும் ஜெயசந்திரன், இந்த திட்டத்தை மற்ற மாணவர்களுக்கும் விரிவுப்படுத்த நினைப்பதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

603 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

233 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

46 views

பிற செய்திகள்

மார்ச் 10 முதல் 17 வரை பீனிக்ஸ் மால் சென்றவரா நீங்கள்? - கவனமுடன் இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு மார்ச் 10 முதல் மார்ச் 17க்கு இடைப்பட்ட நாட்களில் சென்றவர்கள் கவனமாக இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

17 views

தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் : கிருமி நாசினிகளை வழங்கினார் ஆர்.எஸ்.பாரதி

கொரோனா வைரஸ் காரணமாக முக கவசம் அணிவது மற்றும் கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

11 views

கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கடன் - மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் கோரிக்கை

வறுமையில் வாடும் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ 10,000 கடனாகவும் 5 ஆயிரம் மானியமாகவும் உடனடியாக வழங்க வேண்டும் மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

10 views

அரசு மருத்துவமனையில் எம்.பி.திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனையில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

7 views

ஆன்லைன் மூலம் வகுப்புகள் - சென்னை பல்கலை. துணை வேந்தர் உத்தரவு

ஊரடங்கு உத்தரவால் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.

29 views

நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவ வேண்டும் - அரசுக்கு நடிகர் சரவணன் கோரிக்கை

கொரோனாவால் சினிமா தொழில்கள் முடங்கியுள்ளதால் நலிவடைந்த கலைஞர்களுக்​கு உதவித்தொகை வழங்க வேண்டும் என நடிகர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.