கொரோனா அச்சுறுத்தல் - வெறிச்சோடிய புகழ்பெற்ற கோயில்கள்

கொரோனா அச்சுறுத்தலால், தமிழகத்தின் புகழ்பெற்ற கோயில்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
கொரோனா அச்சுறுத்தல் - வெறிச்சோடிய புகழ்பெற்ற கோயில்கள்
x
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில், கொரோனா அச்சம் காரணமாக பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் தெர்மல் ஸ்கேனிங்கிற்க்கு பின்னரே அனுமதிப்படுகின்றனர். இதனிடையே, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், கோவிலில் நேரில் ஆய்வு செய்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. சோதனைக்கு பின்னரே, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.   

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், மாசி திருவிழாவின் எட்டாம் நாளான இன்று, பக்தர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. இதனால், கோயில் வளாகம் மட்டுமின்றி அங்கு செல்லும் சாலைகளும் வெறிச்சோடின. 

நாகையில் உள்ள நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணியில், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகு குறைவாக இருந்தது. சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள், பரிசோதனைக்கு உட்படுத்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்