பேருந்து, ரயில், விமான நிலையத்தில் வெடிகுண்டு - மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு

சென்னையில் பேருந்து, ரயில், விமான நிலையங்களி​ல் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாக வந்த மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்து, ரயில், விமான நிலையத்தில் வெடிகுண்டு - மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு
x
காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில்  குண்டு வெடிக்க போவதாக தெரிவித்து விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனையடுத்து அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர்.  பின்னர் அந்த தொலைபேசி அழைப்பு பொய்யானது என தெரியவந்தது. இதனையடுத்து செல்போன் எண்ணை பயன்படுத்தி மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்