புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் கங்கை கொண்டான் ரயில் நிலையம்

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணையாக நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் கங்கை கொண்டான் ரயில் நிலையம்
x
வாஞ்சி மணியாச்சி முதல் நெல்லை, நாகர்கோவில் வரையிலான ரயில் நிலையங்களை மேம்படுத்த 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதன் முதற்கட்டமாக கங்கை கொண்டான் ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. புதிய நடை மேடை, கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் கவுன்டர், வாகன நிறுத்தம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதன் அடுத்தகட்டமாக தாழையூத்து, செங்குளம், வள்ளியூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்