கோழியில் கொரோனா - ஒரு வதந்தி பல ஆயிரம் கோடி இழப்பு

கோழிப்பண்ணைத் தொழிலில் ஏற்பட்டுள்ள சரிவை ஈடுகட்ட அரசு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோழியில் கொரோனா - ஒரு வதந்தி பல ஆயிரம் கோடி இழப்பு
x
கோழி இறைச்சியில் கொரானா வைரஸ் உள்ளதாக தவறான வதந்தி உருவாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில்,  வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணை உரிமையாளர் சங்கத்தின் துணை தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், வதந்தி காரணமாக, கறிக்கோழி உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பண்ணையாளர்கள் வங்கி  கடனை கட்டமுடியாமல் தவிப்பதாகவும், இதனால் தினசரி பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  பொதுமக்கள் பயம் இன்றி இறைச்சி, முட்டை சாப்பிட  விழிப்புணர்வு பிரசாரங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் சுப்ரமணியன் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்