டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு: லேப்டாப், செல்போன் ஆதாரங்கள் அழிப்பு
டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் ஆதாரங்கள் அழிக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் ஏ.டி.எஸ்.பி உறுதி அளித்ததாக விஷ்ணு பிரியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோடு DSP விஷ்ணு பிரியா கடந்த 2015 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருடைய அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட லேப் டாப், செல் போன் ஆகியவற்றில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ஆன் லைன் மூலம் விஷ்ணு பிரியாவின் தந்தை புகார் மனு அனுப்பி இருந்தார். அதனையடுத்து, நாமக்கல் ஏ.டி.எஸ்.பி அலுவலகத்தில் அவர் நேரில் ஆஜரானார். அப்போது இவ்வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்தபடும் என ஏடிஎஸ்பி ரவிக்குமார் உறுதி அளித்ததாக அவர் தெரிவித்தார். மேலும் தன்னிடம் 23 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
Next Story