பறவை காய்ச்சல்: தமிழக கால்நடை பராமரிப்பு துறை தீவிர கண்காணிப்பு

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது.
பறவை காய்ச்சல்: தமிழக கால்நடை பராமரிப்பு துறை தீவிர கண்காணிப்பு
x
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களிலும், 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு,கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கோழிகள் திருப்பி அனுப்பப்படுவதாகவும், இதர வாகனங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். 

கடந்த ஒரு மாதத்தில் கேரளாவில் இருந்து வாங்கப்பட்ட முட்டை மற்றும் கோழி, வாத்து குஞ்சுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். மேலும், சரணாலயங்கள் மற்றும் விலங்கியல் பூங்காங்களில் உயிரினங்கள் உயிரிழந்தால், உடனடியாக மருத்துவ அலுவலர்களிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்