பொங்கல் பரிசு திட்டத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசு திட்டத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
x
உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி, திட்டத்தை செயல்படுத்த தடை கோரி தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தமிழகம் முழுவதுமுள்ள 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2 ஆயிரத்து 363 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு இந்த வழக்கை நடத்துவதற்கான முகாந்திரம் ஏதுமில்லை என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்