"கொரோனாவால் கையெடுத்து கும்பிடும் வெளிநாட்டினர்" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேச்சு

குழந்தைகள் அனைவரும் நமது பாரம்பரிய தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் கையெடுத்து கும்பிடும் வெளிநாட்டினர் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேச்சு
x
திருச்சியில் தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை செளந்தரராஜன் பிரதமர் ஒரு நாளும் விடுமுறை எடுப்பதில்லை என்பதால் அவரை பார்த்து பழக்கப்பட்ட தாங்களும் விடுமுறை எடுப்பதில்லை என்று கூறினார். மேலும், குழந்தைகள், நமது பாரம்பரிய தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என கூறிய தமிழிசை, நம்மிடம் மோசமாக நடந்துகொள்பவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இந்த கலை பயன்படும் என்றும், அதனை அனைத்து பள்ளிகளிலும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  மேலும், உலகிலேயே சிறந்தது நமது நாகரிகமும், பாரம்பரியமும் தான் என்று கூறிய தமிழிசை, ஒருவருக்கொருவர் கைகொடுத்து கொண்டிருந்த வெளிநாட்டினர், தற்போது கொரோனாவால் கைக்கூப்பி வணக்கம் கூறுகின்றனர் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்