ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு, மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு, மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு, மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட, 3 ஆயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது இரண்டாவது நாளாக  சாட்சிக் கூண்டில் ஏறி ப.சிதம்பரம் சாட்சியம் அளித்தார்.அப்போது,வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறிய குற்றச்சாட்டுக்களை சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்தார். 2 மணி நேரத்திற்கும் மேல் நடந்த குறுக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து,  விசாரணையை, நீதிபதி, மார்ச் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்