கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்லில் கண்காணிப்பு தீவிரம்

பறவை காய்ச்சல் நோய் தாக்கம் எதிரொலியாக நாமக்கல் மாவட்டத்தில் 45 அதிவிரைவு படைகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாகியுள்ளது.
கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்லில் கண்காணிப்பு தீவிரம்
x
கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள் கொண்ட 45  அதிவிரைவு குழு அமைத்து, 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரமாகி உள்ளது. மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் கோழிகளுக்கு மருந்து தெளித்தும், உடலில் செலுத்தியும் பாதுகாக்கப்படுகிறது. நோய் தாக்கிய பகுதிகளில் இருந்து தீவனம், முட்டை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய வேண்டாம் என கோழி பண்ணையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்