தாயின் கையில் இருந்து தவறிவிழுந்த குழந்தை பலி

மதுரை உசிலம்பட்டி அருகே தாயின் கையில் இருந்து, தவறி விழுந்து 3 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாயின் கையில் இருந்து தவறிவிழுந்த குழந்தை பலி
x
கட்டகருப்பன்பட்டியை சேர்ந்த கலாவதி - சரவணன் தம்பதிக்கு, ஏற்கனவே 2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், பிறந்த மூன்று மாதமே ஆன குழந்தையை, தாய் கலாவதி குளிக்க வைத்துள்ளார். அப்போது, கையிலிருந்து குழந்தை தவறி விழுந்தாக கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த, குழந்தையை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து, பரிசோதித்ததில் மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பின்னர், தகவலறிந்து வந்த போலீசார், உடலை, உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்து, குழந்தை இறப்பிற்கான காரணம் குறித்து,  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்