கணவன் மனைவி பிரச்சினையில் கட்டப் பஞ்சாயத்து - மிரட்டி பணம் பறிக்க முயன்ற அரசியல் பிரமுகர்

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் சுலைமான்சேட், தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
கணவன் மனைவி பிரச்சினையில் கட்டப் பஞ்சாயத்து - மிரட்டி பணம் பறிக்க முயன்ற அரசியல் பிரமுகர்
x
தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் சுலைமான்சேட், தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தநிலையில் கணவன் - மனைவி பிரச்சினையை கட்டப் பஞ்சாயத்து மூலம் சரிசெய்துவிடலாம் எனக் கூறி, ஒரு அரசியல் கட்சி பிரமுகர்  30 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதுடன், கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். காயமடைந்த சுலைமான்சேட் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் அரசியல் கட்சி பிரமுகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்