ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் பெயர் வரும் ஆகஸ்டில் அறிவிக்கப்படும் என தகவல்
நடிகர் ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் பெயர், வரும் ஆகஸ்டில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினிகாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டதுடன் கருத்துக்களையும் கேட்டறிந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் அமைப்பு ரீதியாக வலுவான கட்டமைப்பை உருவாக்கிய பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கலாம் என ரஜினி அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூறியதாக தெரிகிறது. வரும் நான்கு மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. பிரதான கட்சிகளே கூட்டணி அமைத்து செயல்படும் நிலையில், நாமும் கூட்டணி அமைத்தால் தான் சரிவரும் என ரஜினி கூறியதாகவும், கமல் உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாவட்ட செயலாளர்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கனவே ரஜினி அறிவித்திருந்த நிலையில் தற்போதைய நகர்வுகள் அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
Next Story