"ஹைட்ரோ கார்பன் திட்டம் : மாநில அரசே முடிவு எடுக்கலாம்"- மக்களவையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டங்களை அனுமதிப்பது குறித்து மாநில அரசே இறுதி முடிவு எடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
x
ஈரோடு தொகுதி எம்.பி கணேசமூர்த்தி உள்ளிட்டோர் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். 

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்  திட்டங்களை செயல்படுத்த  மக்களிடம்  கருத்துகேட்பது அவசியம் என அதில் தெரிவித்துள்ளார். 

இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டத்தை நிறைவேற்றும் நிறுவனம் மாநில அரசின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் மாநில அரசு எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

இது போன்ற திட்டங்களுக்கு நீர் மற்றும் காற்று சட்டங்கள் அடிப்படையில் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சம்மதத்தை பெற வேண்டியது அவசியம் என்றும் பிரகாஷ் ஜவடேகர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார். 

சுற்றுச்சூழல் அனுமதியை பெறுவதில் எந்தவிதமான மாற்றமும் கொண்டு வரப்படவில்லை எனவும்,  சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்