பிறந்து 1 மாதமே ஆன பெண் சிசு கள்ளிப்பால் கொடுத்து கொலை - தந்தை, தாய் கைது

பிறந்து 1 மாதமே ஆன பெண்சிசுவை கள்ளிப்பால் கொடுத்து கொன்று புதைத்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிறந்து 1 மாதமே ஆன பெண் சிசு கள்ளிப்பால் கொடுத்து கொலை - தந்தை, தாய் கைது
x
மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே உள்ள புள்ளநேரி கிராமத்தில் தான் அந்த கொடுமை நிகழ்ந்துள்ளது... அந்த கிராமத்தை சேர்ந்த வைரமுருகன், சவுமியா தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில், கடந்த ஜனவரி 31 ஆம் தேதி மீண்டும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார் சவுமியா... 

* கடந்த 2 ஆம்தேதி அந்த பெண் குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது. உடல்நலக்குறைவால் குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறி பெற்றோரும் அவசர அவசரமாக குழந்தையை புதைத்துள்ளனர். 

* வைரமுருகன், சவுமியா தம்பதியின் இந்த நடவடிக்கைகள் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, காவல்நிலையத்திற்கு தகவல் பறந்துள்ளது. 

* காவல்துறையினரின் விசாரணையில் , ஊர்மக்கள் சந்தேகித்த‌து போலவே, பெற்றோர் பெண் சிசுவை கள்ளிப்பால் கொடுத்து கொன்றது தெரிய வந்த‌து. இந்த சம்பவம் தொடர்பாக சவுமியா, வைரமுருகன், அவரது த‌ந்தை சிங்கதேவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

* இதை தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை டி.எஸ்.பி. ராஜாதலைமையிலான குழுவினர் குழந்தையின் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையும், குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொல்லப்பட்டதை உறுதி செய்த‌து. 

* 1980 களில் அரங்கேறி வந்த இந்த கள்ளிப்பால் கலாச்சாரம் மீண்டும் துளிர்விடுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

* இதேபோல உசிலம்பட்டி அருகே பிறந்து 18 நாட்களே ஆன பெண் சிசு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. உசிலம்பட்டி ஒருகே சத்தியமூர்த்தியை சேர்ந்த பவித்ரா ஜெயபாண்டி தம்பதி.. இவர்களது 18 நாள் பெண் சிசு உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது. விரைந்து சென்ற காவல்துறை பெற்றோரிடம் விசாரணை செய்து வருகின்றனர். 

* ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு சிசுக்கள்  மர்ம‌மான முறையில உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்