விபத்தில் சிக்கியது போல நடித்து பணம், வாகனம் கொள்ளை - 6 பேர் கும்பலை கைது செய்த தனிப்படை போலீசார்

நெல்லையில் நெடுஞ்சாலைகளில் விபத்தில் சிக்கியதை போன்று நடித்து, உதவிக்கு வருபவர்களிடம் பணம் மற்றும் இருசக்கர வாகனங்களை பறித்துச்செல்லும் 6 பேர் கும்பலை, போலீசார் கைதுசெய்தனர்.
விபத்தில் சிக்கியது போல நடித்து பணம், வாகனம் கொள்ளை - 6 பேர் கும்பலை கைது செய்த தனிப்படை போலீசார்
x
நெல்லை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டது போன்று நடித்து, உதவிக்கு வருபவர்களை தாக்கி, இருசக்கர வாகனம் மற்றும் பணத்தை, மர்மநபர் கொள்ளையடித்து செல்வதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக, பாளையங்கோட்டை போலீசார் தனிப்படை அமைத்து, நெடுஞ்சாலைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், 4 வழிச்சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த 6 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள், நெல்லையை சேர்ந்த முத்துவேல், ஹரிஹரன், மணிகண்டன், சங்கரநாராயணன், மாரிசக்தி, சண்முகசுந்தரம் என்பதும், நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுவது போன்று நடித்து, பணம் மற்றும் வாகனத்தை பறித்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, 6 பேரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் 16 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்