ஒரு மாத பெண் குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொலை - கொன்று புதைத்த தாய், தந்தை, தாத்தா என 3 பேர் கைது

மதுரை அருகே ஒரு மாத பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாத பெண் குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொலை - கொன்று புதைத்த தாய், தந்தை, தாத்தா என 3 பேர் கைது
x
புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்த வைரமுருகன்-  சௌமியா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை கடந்த இரண்டாம் தேதி, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக கூறி வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். இது குறித்து சந்தேகமடைந்த கிராம நிர்வாக அலுவலர் மந்தகாளை அளித்த புகாரின் பேரில்,  செக்காணூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் பெற்றோர் வைரமுருகன், சௌமியா, வைரமுருகனின் தந்தை  சிங்கத்தேவர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து, உசிலம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை, டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான குழுவினர் புதைக்கப்பட்ட பெண் சிசுவை தோண்டி எடுத்து உடற்கூறு சோதனை நடத்தினர். அதில், குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. பிறந்து ஒரு மாதமே ஆன  பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Next Story

மேலும் செய்திகள்