"இயற்கையை சுரண்டுவது தொடர்ந்தால் கொரோனா உள்ளிட்ட நோயால் பாதிக்கப்படுவோம்" - மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

இயற்கையை சுரண்டுவது தொடர்ந்தால் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவோம் என நீர் அபகரிப்பு தொடர்பான வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இயற்கையை சுரண்டுவது தொடர்ந்தால் கொரோனா உள்ளிட்ட நோயால் பாதிக்கப்படுவோம் - மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
x
இயற்கையை சுரண்டுவது தொடர்ந்தால் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவோம் என நீர் அபகரிப்பு தொடர்பான வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை பாசன பகுதியில் சட்ட விரோதமாக நீர் எடுப்பது தொடர்பான வழக்கு பி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா வைரஸ் நம் வாசற்படியில் தான் உள்ளது என்றும், இதுபோல் இயற்கையை சுரண்டுவது தொடர்ந்தால் அனைவரும் பாதிக்கப்படுவோம்" என நீதிபதிகள் தெரிவித்தனர். தண்ணீர் திருட்டு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பொதுப்பணித்துறை பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்