"தமிழகத்திற்கு தேவையான குடிநீர் வழங்க ஒப்புதல்" - முதலமைச்சர் சந்திரசேகரராவை சந்தித்த பின் அமைச்சர்கள் கருத்து

தமிழகத்திற்கு தேவையான குடிநீரை வழங்க, கொள்கை ரீதியில் தெலுங்கானா அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு தேவையான குடிநீர் வழங்க ஒப்புதல் - முதலமைச்சர் சந்திரசேகரராவை சந்தித்த பின் அமைச்சர்கள் கருத்து
x
தமிழகத்தின் குடிநீர் தேவை குறித்த முதலமைச்சரின் கோரிக்கை அடங்கிய கடிதத்தை, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து வழங்கினர். அதன் பின் பேசிய அமைச்சர்கள், காவேரி - கோதாவரி இணைப்பு தொடர்பாக தமிழகம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், சந்திரசேகரராவ் தண்ணீர் வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாக கூறினர். குடிநீர் வழங்க ஒப்புக்கொள்வது குறித்து, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆலோசித்து, தமிழகத்துக்கு வேண்டிய ஒத்துழைப்பை வழங்க முடியும் என்று அவர் கூறியதாக, அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்