நீதிமன்ற உத்தரவை மீறி, மணல் அள்ள அனுமதித்தது எப்படி? - நேரில் ஆய்வு மேற்கொள்ள வழக்கறிஞர் ஆணையம் நியமனம்

வைப்பாற்றில், நீதிமன்ற உத்தரவையும் மீறி, மணல் அள்ள அனுமதி வழங்கியது எப்படி? என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி, மணல் அள்ள அனுமதித்தது எப்படி? - நேரில் ஆய்வு மேற்கொள்ள வழக்கறிஞர் ஆணையம் நியமனம்
x
வைப்பாற்றில், நீதிமன்ற உத்தரவையும் மீறி, மணல் அள்ள அனுமதி வழங்கியது எப்படி? என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு, இவ்வாறு மணல் அள்ளுவதால் விவசாயம் பாதிக்கப்படும் என்பது அரசுக்கு தெரியாதா? என்றும், கேள்வி எழுப்பினர். இதனைடுத்து, நிரஞ்சன் என்பவரை வழக்கறிஞர் ஆணையராக நியமித்த நீதிபதிகள், இந்த வழக்கறிஞர் ஆணையம் குறிப்பிட்ட இடத்தில் இன்றே நேரில் ஆய்வுசெய்து, அதன் அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரனையை தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்