மின் கணக்கீட்டாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

மின் கணக்கீட்டாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மின் கணக்கீட்டாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் ஆயிரத்து 300 மின் கணக்கீட்டாளர்கள் பணிக்கான ஆன்லைன் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

* தவறான கேள்விகளுக்கு "நெகடிவ் மதிப்பெண்" வழங்கும் முறை என்பது கிராமப்புற இளைஞர்களை அடியோடு புறக்கணிக்கும் செயலாகும் என்றும் அவர் கூறியுள்ளார். 

* வேலையில்லா இல்லாதமல்  தவித்துக் கொண்டிருக்கும் கிராமப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் தேர்வு என்பதை மனதில் நிலை நிறுத்தி,  தமிழில் ஆன்லைன் தேர்வு நடத்துவதே பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

* எனவே மின்கணக்கீட்டாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்