ஏழை விவசாயிகளுக்கு அரசு வழங்கிய நிலம் : ஆக்கிரமித்து உள்ளவர்களிடம் மீட்டு தர விவசாயிகள் கோரிக்கை

ஏழை விவசாயிகளுக்கு அரசு வழங்கிய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் இருந்து மீட்டு தருமாறு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிபட்டி, பெரியம்மா பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நில உச்சவரம்பு சட்டப்படி, கடந்த 1984 ஆம் ஆண்டு அரசு கைpபற்றியது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலங்களில் சிலவற்றை, நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கு அரசு இலவசமாக வழங்கியது. ஆண்டிபட்டி பகுதியில்  கைப்பற்றபட்ட உபரி நிலங்களில் 70 ஏக்கர் நிலம் 42 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிலங்களை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது‌. இதுகுறித்து பழனி சார்ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில செயலாளர் சண்முகம், தனியார் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்டு விவசாயிகளுக்கு கொடுக்கும்  நடவடிக்கைகள்  தீவிரப்படுத்தப்படும் என சார் ஆட்சியர் உறுதி அளித்ததாக தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்