தந்தி டிவி செய்தி எதிரொலி : ஓய்வூதியத்தில் பிடிக்கப்பட்ட தொகையை ஸ்டேட் வங்கி திருப்பி அளித்தது - ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மகிழ்ச்சி

தந்தி டி.வி. செய்தி எதிரொலியாக, ஓய்வூதியத்தில் பிடிக்கப்பட்ட தொகையை ஸ்டேட் வங்கி திருப்பி அளித்துள்ளதால் உடல் ஊனமுற்ற, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தந்தி டிவி செய்தி எதிரொலி : ஓய்வூதியத்தில் பிடிக்கப்பட்ட தொகையை ஸ்டேட் வங்கி திருப்பி அளித்தது - ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மகிழ்ச்சி
x
இந்திய ராணுவத்தில் பணியாற்றி உடல் ஊனமுற்று ஓய்வுபெற்ற முன்னாள் படை வீரர்களுக்கு,  ஓய்வூதியமாக 100 ரூபாய் அளிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தமிழகம் மட்டுமன்றி இந்தியாவிலுள்ள உடல் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

* 100 ரூபாய் ஓய்வூதியத்தைக் கொண்டு குடும்ப செலவு, பிள்ளைகளின் பள்ளி செலவுகளை எப்படி சமாளிப்பது என கவலை ரேகை சூழ்ந்த அந்த முகங்கள், இந்த தகவலை அரசுக்கு தெரிவிப்பதற்காக ஏங்கி நின்றது. அவர்களின் வாட்டமான குரலை, தந்தி டிவி செய்தியாக  ஒளிபரப்பியது.

* இது தொடர்பாக  வங்கி அதிகாரிகள் அளித்த விளக்கத்தில், ஓய்வூதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்ததாக தெரிவித்திருந்தது.

* இந்த சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில்,  வருமான வரியை பிடித்தம் செய்யக்கூடாது என பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பினை வெளியிட்டது.

* இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை ஓய்வூதியத்தில் வரி பிடித்தம்  செய்யக்கூடாது என மத்திய அரசு கூறியது.

* அதையடுத்து ஓய்வூதியத்தில் பிடிக்கப்பட்ட வருமான வரி தொகை, எஸ்.பி.ஐ வங்கி திருப்பி அளித்துள்ளது.

* பிடித்தம் செய்யப்பட்ட பணம் மீண்டும் தங்களுடைய வங்கி கணக்கில் சேர்ந்ததும், உடல் ஊனமுற்ற, ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிந்தது.

* இதனிடையே, நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதியம் குறித்து செய்தி வெளியிட்டு திரும்ப கிடைக்க உதவிய த‌ந்தி டிவிக்கு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்