அடமான நகை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கு - சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவு
மதுரை திருநகர் தனியார் நிறுவனத்தில் வங்கி லாக்கர் திறக்கப்பட்டு அடமான நகை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ரவிகுமார், காளிதாஸ் ஆகியோருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் பிப்ரவரி 10 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது.
மதுரை திருநகர் தனியார் நிறுவனத்தில் வங்கி லாக்கர் திறக்கப்பட்டு அடமான நகை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ரவிகுமார், காளிதாஸ் ஆகியோருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் பிப்ரவரி 10 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி நிதி நிறுவன மேலாளர் நாகபிரபு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இருவருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியும் உத்தரவிட்டார்.
Next Story