"சுவர் விளம்பரம் எழுதுவதில் இரு கட்சிகள் இடையே மோதல்" - சுவரில் திருக்குறளை எழுதி சுவாரஸ்யமாக்கிய போலீஸ்

கடலூரில், சுவர் விளம்பரம் எழுதுவதில் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட இருந்த நிலையில், போலீசார் அந்த சுவரில்,திருக்குறளை எழுதி சுவாரஸ்யமாக்கினர்.
சுவர் விளம்பரம் எழுதுவதில் இரு கட்சிகள் இடையே மோதல் - சுவரில் திருக்குறளை எழுதி சுவாரஸ்யமாக்கிய போலீஸ்
x
கடலூரில், சுவர் விளம்பரம் எழுதுவதில் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட இருந்த நிலையில், போலீசார் அந்த சுவரில்,திருக்குறளை எழுதி  சுவாரஸ்யமாக்கினர். செல்லங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளியின் சுற்றுச்சுவரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் விளம்பரத்திற்காக இடம் பிடித்தனர். இந்த நிலையில், அந்த இடத்தில் தாங்களும் இடம்பிடித்து வைத்திருந்ததாக கூறி, பாமகவினர் முதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து இருக்கட்சிகளுக்குமான மோதலை தவிர்க்க, போலீசாரே அந்த சுவரில் திருக்குறளை எழுதினர். Next Story

மேலும் செய்திகள்