கோவையில் இந்து முன்னணி செயலாளர் மீது தாக்குதல்

கோவை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியால் அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவையில் இந்து முன்னணி செயலாளர் மீது தாக்குதல்
x
குறிச்சியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர், இந்து முன்னணியின் கோவை மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார். நேற்று, அவர், காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், தனது நண்பருடன் பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். நஞ்சுண்டாபுரம் என்ற இடத்தில், பின்னால் மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள், ஆனந்தை, இரும்புக்கம்பியால் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதை தொடர்ந்து  நண்பரின் உதவியுடன்,ஆனந்த், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 20 தையல்கள்  போடப்பட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் கோவை அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து  நிறுத்தப்பட்டது. மேலும் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்