குரூப் 4 முறைகேட்டை போல 2016 விஏஒ தேர்விலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஓம்காந்தன், ஜெயக்குமார் ஒப்புதல்

குரூப்4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஓம்காந்தன், இடைத்தரகர் ஜெயக்குமார் ஆகியோர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ தேர்விலும் முறைகேட்டில் ஈடுபட்டது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாராணையில் தெரியவந்துள்ளது.
குரூப் 4 முறைகேட்டை போல 2016 விஏஒ தேர்விலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஓம்காந்தன், ஜெயக்குமார் ஒப்புதல்
x
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு தொடர்பாக, அதன் அலுவலக ஊழியர் ஓம்காந்தன், இடைத்தரகர் ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இருவரையும் 12 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இருவரையும், இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்து சென்று அவர்கள், தங்கியிருந்த விடுதி,  மற்றும் முத்துபேட்டை, வேர்கோடு ஆகிய 2 தேர்வு மையங்களுக்கும் அழைத்து சென்று பல மணிநேரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், குரூப் 2 மற்றும் குரூப் 4  ஆகிய தேர்வு முறைகேடுகளை தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ தேர்விலும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து,  மதுரை மாவட்டம் மேலூர் புறவழிச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர்கள், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தேர்வு மையத்திலிருந்து அரசு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட  விடைதாள்களை மேலூர் நான்கு வழிச்சாலையில் வைத்து மாற்றியது எப்படி என தகவல் அளித்து நடித்து காட்டினர். இதனை வீடியோ மற்றும் புகைப்படமாக போலீசார் எடுத்துகொண்டனர். இந்த வி.ஏ.ஓ தேர்வு முறைகேடு தொடர்பாக இருவரிடமும் இருந்து 10 பேர் கொண்ட பட்டியல் முதற்கட்டமாக தெரிவந்துள்ளதாகவும் இனி அடுத்த கட்ட விசாரணையை துவக்கவுள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்