"அடுத்த மாதம் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு" - அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி அறிவிப்பு

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, அடுத்த மாதம் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு - அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி அறிவிப்பு
x
அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். தாங்கள் ஏற்கனவே தேர்வு செய்துள்ள தேர்வு மையங்களுக்குரிய அலுவலர்களை நியமனம் செய்து, பட்டியலை இந்த மாதம் 13-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும்  கூறியுள்ளார்.  முதன்மை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டு,  காப்பாளர்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் உஷாராணி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்