33 அடி உயர குதிரை சிலைக்கு மாலை அணிவிக்கும் விழா - காகித பூ தயாரிக்கும் பணி தீவிரம்

மாசி மாத திருவிழாவை முன்னிட்டு அறந்தாங்கி அருகே குளமங்கலத்தில் உள்ள அய்யனார் கோயிலில் உள்ள 33 அடி உயர குதிரை சிலைக்கு அணிவிக்க காகிதப் பூ மாலை கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில். இக்கோயில் முன்பு அமைந்துள்ள 33 அடி உயர பிரமாண்ட குதிரை சிலை தான் அந்த ஊரின் அடையாளம் என்றே சொல்லலாம். அய்யனாரின் வாகனம் குதிரை என்பதால் சுற்றுவட்டார கிராம மக்கள் மாசி மகத்திருவிழாவில் காகிதப் பூவில் மாலை செய்து பிரமாண்ட குதிரை சிலைக்கு அணிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இதனிடையே, பிளாஸ்டிக் பூ மாலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் காகித பூ மாலைக்கு அதிக ஆர்டர் குவிந்துள்ளதாக கூறுகிறார் அங்குள்ள வியாபாரி.. மாலை அணிவிக்கும் அழகை காணவும், மாலை அணிவிக்கவும், உள்நாடு  மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ளவர்களும் வருவதால், வரும் 8ம் தேதி நடைபெறும் திருவிழாவிற்கு ஒன்றரை லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறுகிறார் அப்பகுதியை சேர்ந்த சிவராஜ்...

Next Story

மேலும் செய்திகள்