தண்டராம்பட்டு ஒன்றிய குழு தலைவர் தேர்தல்: 3வது முறை ஒத்திவைப்பு - ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில், ஓன்றியக் குழுத் தலைவருக்கான மறைமுக தேர்தல் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தண்டராம்பட்டு ஒன்றிய குழு தலைவர் தேர்தல்: 3வது முறை ஒத்திவைப்பு - ஆட்சியர் அறிவிப்பு
x
 இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ளார். தேர்தல் அதிகாரியை மாற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வருகிற 6ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதையொட்டி, இன்று நடைபெறுவதாக இருந்த தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பல்வேறு காரணங்களால், இரண்டு முறை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்