"ஆவின் பால் நிறுவனத்தில் இருந்து பிளாஸ்டிக் தடை நடவடிக்கையை தொடங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

பிளாஸ்டிக் தடை உத்தரவை, ஆவின் பால் பாக்கெட்டில் இருந்து துவங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆவின் பால் நிறுவனத்தில் இருந்து பிளாஸ்டிக் தடை நடவடிக்கையை  தொடங்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
x
பிளாஸ்டிக் அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ப்ளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

* இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பி.டி ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

* அப்போது, தமிழக சுற்றுசுழல் மற்றும் வன துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

* அதில், பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த, 52 தொழிற்சாலைகளை மூட, உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பால், தயிர், எண்ணெய் போன்ற உணவு பொருட்களை அடைக்க பயன்படுத்தும்  பிளாஸ்டிக்குக்கு  அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீக்குவது குறித்து,

* கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் பரிந்துரை அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அரசின் அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள்,  ஆவின் பால் நிறுவனத்தில் இருந்து இந்த நடவடிக்கை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

* திரைப்படங்கள், கல்வி நிறுவனங்களில் பிளாஸ்டிக் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள்,   

* பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மாற்று பொருட்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை ஏப்ரல் 28-ம் தேதி தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்