தென்காசி மாவட்டத்தில் 100 அடி உயர புத்தர் கோபுரம் இன்று திறப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த இருமன்குளம் மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயரமுள்ள புத்தர் கோபுரம், இன்று திறக்கப்பட உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 100 அடி உயர புத்தர் கோபுரம் இன்று திறப்பு
x
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த இருமன்குளம் மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயரமுள்ள புத்தர் கோபுரம், இன்று திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி, அங்குள்ள உலக அமைதிக்கான புத்தர் கோயிலில், புத்தரின் அஸ்தி வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள்  நடைபெற்றன. இதில், ஜப்பான், கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த புத்த பிட்சுகள் கலந்துகொண்டனர். திறப்புவிழாவில் மங்கோலியா மற்றும் கொரிய நாட்டு தூதர்கள் பங்கேற்க உள்ளதால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்